எமது சங்கம் தமிழ் கனேடியர் நடைபவனியில்September 8th, Sunday @ 9AM

கடந்த 6 வருடங்களுக்கு மேலாக எமது சங்கம் தமிழ் கனேடியர் நடைபவனியில் ( Tamil Canadian Walk) கலந்து எமது சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் இணைந்திருப்பதை எமது அங்கத்தவர்கள் அறிவர். இச்செயற்பாடுகளில் எமது அங்கத்தவர்களது பங்களிப்பில் பயன்மிக்க பல வேலைத்திட்டங்களில் பங்குகொண்டுள்ளோம்.
அந்தவகையில் வருகின்ற 8ம் திகதி (September 8th, Sunday @ 9AM), ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணிக்கு தொம்சன் பூங்காவில் (Thomson-Memorial-Park) நடைபவனி நடைபெறவுள்ளது.
 
இவ்வாண்டு Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு நிதிசேகரிக்கும் நோக்கோடு நடைபவனி இடம்பெறவிருக்கின்றது. எமது மொழியே எமது அடையாளம்! எமது தலைமுறை Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு தவறின், இனிவரும் தலைமுறையினர் அக்கறைப்படமாட்டார்கள். எனவே தமிழ் இருக்கையை அமைப்பது எமது தலைமுறையினரின் வரலாற்றுக்கடமையாக கருதுகின்றோம். இன்னும் 2 மில்லியன் கனேடிய டொலர்களே தேவையாக உள்ளது.
எமது அங்கத்தவர்கள் அனைவரும் சமூகமளிப்பதுடன், தங்களது பங்களிப்பை நல்கும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
 
மேலதிக விபரங்களுக்கு கீழ் இணைக்கப்பட்டுள்ள இணையத்தளங்களைப்பார்வையிடலாம்.

2019 CANADIAN TAMIL WALK IN SUPPORT OF THE TORONTO TAMIL CHAIR INITIATIVE

Make Every Day Count #tamilcanadianwalk2019
Sunday, September 8, Thomson Memorial Park, Scarborough, 9 am