யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை பரிசளிப்பு நிகழ்வு சுப்பிரமணியம் மாலதி மண்டபத்தில், வித்தியாலய முதல்வர் பேரம்பலம் தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கலந்து சிறப்பித்தார்.
இதன்போது பாடசாலை கல்வி, விளையாட்டு உட்பட இதர செயற்பாடுகளில் சாதனை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.
இதில் நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அருணாச்சலம் அகிலதாஸ், பழைய மாணவர் சங்க செயலாளர் தயானந்தன் துஷ்யந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Social Profiles