“பாடசாலையை நோக்கி” – ஞாபகார்த்த புலமைப்பரிசில்கள்!
கொக்குவில் இந்துக் கல்லூரியின் 1988ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் மற்றும் 1991ஆம் ஆண்டு உயர் தரம் பரீட்சைக்கு தோற்றிய பழைய மாணவர்களின் ஆசிரியர்களுடனான ஒன்றுகூடலும் கௌரவிப்பு விழாவும் கடந்த August 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரியில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக கல்லூரிக்கு பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கான புலமை பரிசில்கள் இறையடி சேர்ந்துவிட்ட கல்லூரி முன்னாள் ஆசிரியர்களான ஆசிரியை அமரர். திருமதி. பரமேஸ்வரி சண்முகரட்ணம் ,ஓவிய ஆசிரியர் அமரர். திரு. அல்போன்ஸ் மாற்கு , ஆசிரியர் அமரர். திரு. பொன்னையா சபாரட்ணம் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டது.
அமரர். திருமதி. பரமேஸ்வரி சண்முகரட்ணம் அவர்களின் ஞாபகார்த்த புலமைப்பரிசில்
காலஞ்சென்ற ஆசிரியை அமரர். திருமதி. பரமேஸ்வரி சண்முகரட்ணம் (சிவக்கொழுந்து ரீச்சர்) அவர்களின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் செல்வன் பரமேஸ்வரன் மதுஷனுக்கு கரம் விளையாட்டில் அதி உயர் திறமையை வெளிக்காட்டியமைக்காக வழங்கப்பட்டது.
செல்வன் பரமேஸ்வரன் மதுஷன் 2017,2016 ம் ஆண்டுகளில் மாகாண மட்ட கரம் விளையாட்டில் சாம்பியன் பட்டத்தையும் 2015ம் ஆண்டு மாகாண மட்ட போட்டியில் 3ம் இடத்தை பெற்று கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு பெருமை தேடித்தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கான புலமைப்பரிசில் அமரர். திருமதி. பரமேஸ்வரி சண்முகரட்ணம் (சிவக்கொழுந்து ரீச்சர்) அவர்களின் சகோதரி Dr. தவமலர் அவர்களால் வழங்கப்பட்டது.
அமரர். திரு. அல்போன்ஸ் மாற்கு அவர்களின் ஞாபகார்த்த புலமைப்பரிசில்
காலஞ்சென்ற ஓவிய ஆசிரியர் அமரர். திரு. அல்போன்ஸ் மாற்கு அவர்களின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் செல்வன் பாஸ்கரன் பிரவீனுக்கு கிரிக்கெட்டில் திறமையை வெளிக்காட்டியமைக்காக வழங்கப்பட்டது.
செல்வன் பாஸ்கரன் பிரவீன் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் துடுப்பாட்டம் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பு திறமையை வெளிக்காட்டி வருவதோடு கொக்குவில் இந்துக் கல்லூரி கிரிகெட் அணியின் வெற்றிகளுக்கு உறுதுனையாக இருந்து வருகிறார்.
இவருக்கான புலமைப்பரிசில் அமரர். திரு. அல்போன்ஸ் மாற்குஅவர்களின் மகன் போல் செல்வகுமார் அவர்களால் வழங்கப்பட்டது.
அமரர். திரு. பொன்னையா சபாரட்ணம் அவர்கள் ஞாபகார்த்த புலமைப்பரிசில்
காலஞ்சென்ற ஆசிரியர் அமரர். திரு. பொன்னையா சபாரட்ணம் அவர்கள் ஞாபகார்த்த புலமைப்பரிசில் செல்வன். குகநேந்திரன் புருஷோத்தமனுக்கு கூடைப்பந்தில் அதிஉயர் திறமையை வெளிக்காட்டியமைக்காக வழங்கப்பட்டது.
செல்வன் குகநேந்திரன் புருஷோத்தமன் 2017ம் ஆண்டு யாழ் மாவட்ட கூடை பந்தாட்ட போட்டிகளில் 17 வயதுகுட்பட்டோர் ஆண்கள் பிரிவில் சாம்பியன் கிண்ணத்தை பெறுவதற்க்கும் , 2016ம் ஆண்டு யாழ் மாவட்ட கூடை பந்தாட்ட போட்டிகளில் 17 வயதுகுட்பட்டோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை பெறுவதற்க்கும் காரணமாக இருந்துள்ளார்.
இவருக்கான புலமைப்பரிசில் அமரர். திரு. பொன்னையா சபாரட்ணம் அவர்களின் மகன் சபாரட்ணம் ரவிகரன் அவர்களால் வழங்கப்பட்டது.
Social Profiles