School Anthem

கல்லூரி வணக்கம்
 
தெளிதரு கலைபயில் பலமா ணவர்தேர்
கொக்குவில் இந்துக் கல்லூரி;
 
கொக்கூர்க்கு இந்துக் கல்லூரிநீ தீபம்;
கிராமத்துக் கொண்மணி மகுடம்.
நினதுயர் கலைமுறை நிதம் நிதம் பெற்றோம்;
நினதருள் யாமினி மறவோம்.
நீயே வித்தை யினுறையுள் , நினதே எங்களினுயர்வு.
நினதடி யேத்து வோமே.
 
பல்லவி
நினதருள் மிகுமொழி நமதே பொருளாம் நீதரு ஞானம தீதம்
ஜெயஹோ! ஜெயஹோ! ஜெயஹோ! ஜெய, ஜெய, ஜெய , ஜெயஹோ!
நீ தரு ஞானம தீதம்.
 
அறிவுச்சுடர் கொண் டறம் பொருள் ளின்பம்
தழுவும் வாழ்வினைத் தந்தாய்
கற்றன ஒழுகும் சீருறு வழிநீ
காட்டினை நீடுக எனவே
அற்புத நடமா டமலன் அடிமனதொடுவழி படுவோம்;
வழிமுறை மிளிர்க நின் நாமம்.
 
பல்லவி
நினதருள் மிகுமொழி நமதே பொருளாம் நீதரு ஞானமதீதம்
ஜெயஹோ! ஜெயஹோ! ஜெயஹோ! ஜெய, ஜெய, ஜெய , ஜெயஹோ!
நீ தரு ஞானம தீதம்.
 
உள்ளத்துறுதி தருவாயுன்றன்
பாரம் பரியம் பேண
பூமியில் நீபெறும் நல்லிசை மேலாம்
பெருமிதம் மாணவர்க் கென்றும்
முயல்குவம் நீயுயர் வழிகள் முழுமன தொடுமகிழ் வாக
கொக்குவில் இந்து நமதே.
 
நினதருள் மிகுமொழி நமதே பொருளாம் நீதரு ஞானமதீதம்
ஜெயஹோ! ஜெயஹோ! ஜெயஹோ! ஜெய, ஜெய, ஜெய , ஜெயஹோ!
நீ தரு ஞானம தீதம்