| கல்லூரி வணக்கம் |
| |
| தெளிதரு கலைபயில் பலமா ணவர்தேர் |
| கொக்குவில் இந்துக் கல்லூரி; |
| |
| கொக்கூர்க்கு இந்துக் கல்லூரிநீ தீபம்; |
| கிராமத்துக் கொண்மணி மகுடம். |
| நினதுயர் கலைமுறை நிதம் நிதம் பெற்றோம்; |
| நினதருள் யாமினி மறவோம். |
| நீயே வித்தை யினுறையுள் , நினதே எங்களினுயர்வு. |
| நினதடி யேத்து வோமே. |
| |
| பல்லவி |
| நினதருள் மிகுமொழி நமதே பொருளாம் நீதரு ஞானம தீதம் |
| ஜெயஹோ! ஜெயஹோ! ஜெயஹோ! ஜெய, ஜெய, ஜெய , ஜெயஹோ! |
| நீ தரு ஞானம தீதம். |
| |
| அறிவுச்சுடர் கொண் டறம் பொருள் ளின்பம் |
| தழுவும் வாழ்வினைத் தந்தாய் |
| கற்றன ஒழுகும் சீருறு வழிநீ |
| காட்டினை நீடுக எனவே |
| அற்புத நடமா டமலன் அடிமனதொடுவழி படுவோம்; |
| வழிமுறை மிளிர்க நின் நாமம். |
| |
| பல்லவி |
| நினதருள் மிகுமொழி நமதே பொருளாம் நீதரு ஞானமதீதம் |
| ஜெயஹோ! ஜெயஹோ! ஜெயஹோ! ஜெய, ஜெய, ஜெய , ஜெயஹோ! |
| நீ தரு ஞானம தீதம். |
| |
| உள்ளத்துறுதி தருவாயுன்றன் |
| பாரம் பரியம் பேண |
| பூமியில் நீபெறும் நல்லிசை மேலாம் |
| பெருமிதம் மாணவர்க் கென்றும் |
| முயல்குவம் நீயுயர் வழிகள் முழுமன தொடுமகிழ் வாக |
| கொக்குவில் இந்து நமதே. |
| |
| நினதருள் மிகுமொழி நமதே பொருளாம் நீதரு ஞானமதீதம் |
| ஜெயஹோ! ஜெயஹோ! ஜெயஹோ! ஜெய, ஜெய, ஜெய , ஜெயஹோ! |
| நீ தரு ஞானம தீதம் |